பிப்.,16ல் ஆண்டிபட்டியில் ஆதார் மையம் செயல்படும்

தேனி: மாவட்டத்தில் உள்ள 5 தாலுகா அலுவலகங்களிலும் அரசு சார்பில் நிரந்தர ஆதார் மையங்கள் செயல்படுகின்றன.

ஞாயிறு நாட்களில் ஏதாவது ஒரு ஆதார் மையம் செயல்பட உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி பிப்.,16ல் ஆண்டிபட்டி தாலுகா அலுவலக வளாகத்தில் உள்ள நிரந்தர ஆதார் மையம் செயல்படும். இங்கு புதிய ஆதார் பதிவு, முகவரி திருத்தம், அலைபேசி எண் இணைப்பு உள்ளிட்ட திருத்தங்கள் மேற்கொள்ளலாம். பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement