அன்பாக பேசியே யானைகளை வெளியேற்றிய தொழிலாளர்கள்

2

வால்பாறை : கோவை மாவட்டம், வால்பாறையை சுற்றியுள்ள பல்வேறு எஸ்டேட்களில், யானைகள் தனித்தனி கூட்டமாக முகாமிட்டுள்ளன.

இந்நிலையில், வால்பாறை அடுத்துள்ள குரங்குமுடி ஸ்ரீராம் எஸ்டேட் ஒன்றாம் நெம்பர் தேயிலை காட்டில், நேற்று காலை, 40 தொழிலாளர்கள் தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, தேயிலை காட்டிற்குள் குட்டியுடன் வந்த மூன்று யானைகளை கண்ட தொழிலாளர்கள், தேயிலை பறிக்கும் பணியை பாதியில் விட்டுவிட்டு நகர்ந்து சென்றனர்.

அப்போது, தொழிலாளர்கள் யானைகளை பார்த்து, 'சாமி அப்படியே காட்டுக்கு போயிடுங்கப்பா... நாங்க வேலை செய்யணும். உங்கள நாங்க ஒன்னும் பண்ண மாட்டோம், நீங்க குட்டிய கூட்டிட்டு அமைதியா காட்டுக்குள்ள போயிருங்க,' என கூறினர்.

தொழிலாளர்கள், கோரஸ்சாக பேசியதை கேட்ட யானைகள், எந்த தொந்தரவும் செய்யாமல் அருகில் உள்ள வனப்பகுதிக்குள் சென்றது. அதன்பின் தொழிலாளர்கள் வழக்கம் போல் தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த வீடியோ இப்போது, சமூகவலைதளங்களில் பரவி, வைரலாகியுள்ளது.

Advertisement