அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.1 கோடி மோசடி; கோத்தகிரியை சேர்ந்த ஒருவர் கைது

ஊட்டி; நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே ஒரசோலை பகுதியை சேர்ந்தவர் மனோ,40. இவர் கோத்தகிரி பேரூராட்சியில் உதவி இயக்குனராக பணியாற்றி வருவதாக கூறி, உள்ளாட்சி துறை உள்ளிட்ட சில அரசு துறைகளில் உதவியாளர் பணி உள்ளதாக தனக்கு அறிந்தவர்களிடம் கூறியுள்ளார்.
அந்த பணியில் சேர்த்து விடுவதாக கூறி, 5 லட்சம் ரூபாய் முதல் 10 லட்சம் ரூபாய் வரை, ஊட்டி, கோத்தகிரி, குன்னுாரை சேர்ந்த பலரிடம் பணம் வசூல் செய்துள்ளார்.
அதன் பின், பணி கேட்டு தொந்தரவு செய்வோருக்கு பல்வேறு துறைகளில் பணியில் சேர்வதற்கான, போலி பணி நியமன ஆணைகளை வழங்கி உள்ளார்.
இந்நிலையில், சிலர், அவர் கொடுத்த பணி நியமன ஆணையுடன் சம்பந்தப்பட்ட அலுவலகங்களுக்கு சிலர் சென்றபோது, அது போலி என்பது தெரிய வந்தது. அதிர்ச்சி அடைந்த அவர்கள், அவரை தொடர்பு கொண்டு பேசிய போது, பணத்தை திருப்பி அளித்துவிடுவதாக கூறியுள்ளார்.
தொடர்ந்து, பணம் கொடுத்து ஏமாந்தவர்களில் சிலர் நேற்று முன்தினம், மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யாவை சந்தித்து மோசடி குறித்து புகார் மனு அளித்தனர். மனுவை பெற்று கொண்ட கலெக்டர், மாவட்ட எஸ்.பி., நிஷாவிடம் விசாரிக்க உத்தரவிட்டார். தொடர்ந்து, மாவட்ட குற்ற பிரிவு டி.எஸ்.பி., சக்திவேல் தலைமையில் போலீசார் கோத்தகிரிக்கு சென்று, நேற்று முன்தினம் இரவு மனோவை கைது செய்தனர்.
டி.எஸ்.பி., சக்திவேல் கூறுகையில், ''மனோவிடம் நடந்த விசாரணையில், 8ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார். வேலை வாங்கி தருவதாக பணம் வசூல் செய்து போலி பணி ஆணை, போலி மருத்துவ சான்றிதழ் தயாரித்து வழங்கி உள்ளார். இதுவரை, 1 கோடி ரூபாய் வரை ஏமாற்றியது தெரிய வந்தது. விசாரணை நடந்து வருகிறது,'' என்றார்.
மேலும்
-
இலங்கை கடற்படையால் 10 மீனவர் கைது
-
திறப்பு விழாவிற்கு காத்திருக்கும் மெதுார் நுாலகம்
-
அரசு வீடுகள் கட்டும் திட்டத்திற்கு இருளஞ்சேரியில் மின்சாரம் திருட்டு
-
வேண்பாக்கம் ஏரியை துார்வாரி சீரமைக்க கோரிக்கை
-
வேலஞ்சேரி அரசு பள்ளி நுழைவு பகுதியில் ஏரியின் உபரிநீர் செல்வதால் மாணவர்கள் அவதி
-
டெண்டர் பங்கீட்டில் அடிதடி டவுன் பஞ்., அலுவலகம் சூறை