அமெரிக்கா நாடு கடத்தும் நபர்களை வரவேற்க கோஸ்டா ரிகாவும் தயார்

சான் ஜோஸ் : அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பொறுப் பேற்றது முதல், அந்நாட்டில் சட்ட விரோதமாக குடியேறியவர்களை, அவரவர்சொந்த நாடுகளுக்கு திருப்பி அனுப்பும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார்.

அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்படும் சட்ட விரோத குடியேறிகளை, மத்திய அமெரிக்க நாடுகளான பனாமா மற்றும் கவுதமாலா நாடுகள் ஏற்றுக்கொள்ளப் போவதாக அறிவித்துள்ளன. இப்போது அந்த வரிசையில், கோஸ்டா ரிகாவும் இணைந்துள்ளது.அமெரிக்காவிலிருந்து இன்று அனுப்பி வைக்கப்படும் 200 சட்ட விரோத குடியேறிகளை பெற, கோஸ்டா ரிகா நாட்டு நிர்வாகம் ஒப்புக்கொண்டுள்ளது. அந்த வகையில், அமெரிக்காவிலிருந்து முதல் முறையாக அனுப்பி வைக்கப்படும், மத்திய ஆசியா மற்றும் இந்தியா போன்ற நாடுகளை சேர்ந்த,200 பேரை பெற்றுக் கொள்ள, கோஸ்டா ரிகா நாடும் முடிவு செய்துள்ளது.

அவ்வாறு, கோஸ்டா ரிகா நாட்டுக்கு வரும் மத்திய ஆசிய நாட்டவர் மற்றும் இந்தியர்கள், பனாமா நாட்டின் எல்லையில் உள்ள தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்படுவர். பின், அங்கிருந்து சீனா, பாகிஸ்தான்,ஆப்கன், இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுவர் என, கோஸ்டா ரிகா தெரிவித்துள்ளது. இதற்கான நிதியுதவியை முழுதும், அமெரிக்கா செய்கிறது. லத்தீன்அமெரிக்க நாடுகள் என அழைக்கப்படும் இதுபோன்ற நாடுகளில் இருந்து, அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறியவர்களின் எண்ணிக்கை, 1.1 கோடி என கூறப்படுகிறது.

Advertisement