கார் மோதி ஒருவர் படுகாயம்

சின்னசேலம், : சின்னசேலம் அருகே கார் மோதி ஒருவர் படுகாயம் அடைந்தார்.

அம்மையகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஹாசீம், 60; இவர் கடந்த, 16ம் தேதி இரவு 7:00 மணிக்கு, அம்மையகரம் பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார்.

அப்போது சடையம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சேகர் என்பவர் ஓட்டி வந்த கார், ஹாசீம் மீது மோதி காயமடைந்தார். உடன், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சின்னசேலம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement