'ஸ்மார்ட்' மீட்டர் கொள்முதலுக்கு ஒப்புதல்

சென்னை:தமிழகத்தில் வீடுகளில் ஆளில்லாமல், மின் பயன்பாட்டை கணக்கெடுக்கும் 'ஸ்மார்ட்' மீட்டர் திட்டத்தை, மின் வாரியம் செயல்படுத்த உள்ளது.

இதற்காக, 3 கோடி ஸ்மார்ட் மீட்டர் பொருத்தி, அதை 10 ஆண்டுகளுக்கு பராமரிக்கும் ஒப்பந்த நிறுவனத்தை தேர்வு செய்ய, 2023ல் 'டெண்டர்' கோரப்பட்டது. அந்த டெண்டர் சமீபத்தில் ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில், சென்னை மின் வாரிய தலைமை அலுவலகத்தில் நேற்று மின் வாரிய இயக்குனர்கள் குழு கூட்டம் நடந்தது. அதில், ஸ்மார்ட் மீட்டர் கொள்முதலுக்கு, மீண்டும் டெண்டர் கோருவது உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி ஸ்மார்ட் மீட்டர் கொள்முதலுக்கு, விரைவில் டெண்டர் கோர முடிவு செய்யப்பட்டு உள்ளது.

Advertisement