விரைவில் புறவழிச்சாலை அமைக்கப்படும் 'தினமலர்' செய்தியை சுட்டிக்காட்டி எம்.எல்.ஏ., உறுதி

உளுந்துார்பேட்டை : 'தினமலர்' நாளிதழ் செய்தி எதிரொலியாக, உளுந்துார்பேட்டையில் புறவழிச்சாலை விரைவில் அமைக்கப்படும்' என, மணிக்கண்ணன் எம்.எல்.ஏ., உறுதியளித்துள்ளார்.

உளுந்துார்பேட்டையில், போக்குவரத்து பாதிப்பைத் தவிர்க்க, எம்.எஸ்., தக்கா பகுதியில் இருந்து திருவெண்ணெய்நல்லுார் சாலையை இணைக்கும் வகையில், புறவழிச்சாலை அமைக்கப்படுவது எப்போது, என 'தினமலர்' நாளிதழில் நேற்று செய்தி வெளியானது.

இந்நிலையில், இப்பகுதியில் உள்ள ஸ்ரீ சாரதா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழாவில், மணிக்கண்ணன் எம்.எல்.ஏ., பங்கேற்று பேசுகையில், 'தினமலர்' நாளிதழ் செய்தியை சுட்டிக்காட்டி, 'புறவழிச்சாலை விரைவில் அமைக்கப்படும்.

அதற்கான நடவடிக்கை உடனடியாக எடுக்கப்பட்டு செயல்படுத்தப்படும்' என்றார்.

Advertisement