உங்களை தேடி உங்கள் ஊர் திட்டம் தொடர்பாக ஆய்வு
நாமக்கல்:நாமக்கல் வட்டத்தில், உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ், நேற்று முன்தினம் பல்வேறு இடங்களில் கலெக்டர் உமா, கள ஆய்வு மேற்கொண்டார்.
தொடர்ந்து, இரண்டாம் நாளாக நேற்று அதிகாலை, நாமக்கல் புது பஸ் ஸ்டாண்டில் துாய்மை பணியாளர்களின் வருகை பதிவேடு, அடையாள அட்டைகளை சரி பார்த்து, துாய்மை பணிகள் மேற்கொள்ளும் போது கட்டாயம் கையுறை உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்துமாறு அறிவுறுத்தினார். மேலும், புது பஸ் ஸ்டாண்டில் உள்ள கடைகளில் உணவு பொருளின் தரம், அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தின் கீழ், சமைக்கப்பட்டிருந்த உணவின் தரம் குறித்தும், பல்வேறு பள்ளிகளுக்கு காலை உணவு வினியோகிக்கும் பணி, காவேட்டிப்பட்டி, மாநகராட்சி நடுநிலைப்பள்ளி மற்றும் எர்ணாபுரம் ஊராட்சி
ஒன்றிய துவக்கப்பள்ளியில் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்படுவதை பார்வையிட்டார்.உழவர் சந்தையில் காய்கறிகளின் தரம், விவசாயி களுக்கான அடையாள அட்டை, விலை விபரம், காய்கறிகளின் வரத்து உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்து, விவசாயிகளுடன் கலந்துரையாடினார். தொடர்ந்து, வள்ளிபுரம் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் கொள்முதல் செய்யப்படும் பாலின் அளவு, பரிசோதிக்கப்படும் முறை, கொள்முதல் விலை, பால் உற்பத்தியாளர்கள் உள்ளிட்ட விபரங்களை கேட்டறிந்தார்.
மேலும்
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 குறைவு
-
நிலம் வாங்கி தருவதாக மோசடி மாநகராட்சி ஊழியர் மீது வழக்கு
-
ஜி.ஹெச்., 5வது மாடியில் இருந்து குதித்து நோயாளி தற்கொலை
-
திருத்தணி முருகன் கோவிலில் அபிேஷக நேரத்திலும் தரிசிக்கலாம்
-
கலவரம் நடப்பதாக கவனத்தை திசை திருப்பும் ஈரானிய கொள்ளையர் போலீஸ் அதிகாரிகள் எச்சரிக்கை
-
ஹாக்கி 'லீக்'கில் 33 அணிகள் பலப்பரீட்சை