அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி


அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி


எலச்சிப்பாளையம்:நாமக்கல் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பாக, நேற்று எலச்சிப்பாளையம் ஒன்றியத்தில் பணிபுரியும், 22 தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு இணையவழி தொழில்நுட்பத்தின் மூலமாக கல்விசார் உய்த்துணரும் தரவுகளை சேகரிப்பதற்கும், சேமிக்கவும் எலச்சிப்பாளையம் வட்டார வளமையத்தில், நிறுவன முதல்வர் செல்வம் தலைமையில் பயிற்சி அளிக்கப்பட்டது.
பள்ளி, படிப்பு, வீட்டு பாடம், கற்றல் அடைவு சார்ந்த தரவுகளை இணைய வழியே கூகுள் படிவம், கூகுள் ஸ்பிரட்ஷீட், எக்ஸெல் போன்ற கணினி மென்பொருட்களை பயன்படுத்தி, ஆசிரியர்கள் அதிக நேரத்தை செலவழிக்காமல், மிகவும் எளிதாக தரவுகளைப் பெறலாம் என, நிறுவன விரிவுரையாளர் பானுமதி பயிற்சி அளித்தார்.
மாணவர்களின் சுய விபரம், மதிப்பெண் போன்ற தனித்துவ விபரங்கள், பள்ளி நிகழ்வு, கற்றல், ஓட்டெடுப்பு, வினாடி-வினா நடத்துதல் போன்றவற்றிற்கு கூகுள் படிவம் பயன்படுத்தவும், ஒரே நேரத்தில் ஆசிரியர்
களிடமிருந்தோ, மாணவர்களிடமிருந்தோ, பெற்றோர்களிடமிருந்தோ தரவுகளை எளிதாக பெற கூகுள் ஸ்பிரட்ஷீட்டை பயன்படுத்தவும், கல்வி இலக்குகளை அடைவதற்கான வாய்ப்புகளை தரவு பகுப்பாய்வு செய்யவும், தரவுகளில் ஏற்படும் மாற்றங்களைக் கொண்டு விளைவின் தாக்கங்களை அறியவும், வரைபடங்கள் வரைய எக்ஸெல்லைப் பயன்படுத்தவும் பயிற்சி அளிக்கப்பட்டது.

Advertisement