பட்டுப்புழு வளர்ப்புகுறித்த பயிற்சி முகாம்



பட்டுப்புழு வளர்ப்புகுறித்த பயிற்சி முகாம்

எருமப்பட்டி: எருமப்பட்டி யூனியனில், விவசாயிகளுக்கான பட்டுப்புழு வளர்ப்பு முறைகள் குறித்த பயிற்சி முகாம்
நடந்தது.எருமப்பட்டி யூனியன் வேளாண் அலுவலகத்தில், தொழில்நுட்ப மேலாண்மை முகமை சார்பில், விவசாயிகளுக்கான பட்டுப்புழு வளர்ப்பு குறித்த பயிற்சி முகாம் நடந்தது. வேளாண்மை இளநிலை அலுவலர் சுரேஷ், பட்டுப்புழு வளர்ப்பு முறைகள் குறித்து விளக்கம் அளித்தார். முக்கியமாக மல்பெரி
பட்டுப்புழு வளர்ப்பு, அதன் மகசூல், இலைகளில் நோய் தாக்கம் குறித்து பேசினார். இதை தொடர்ந்து தனியார் கல்லூரியை சேர்ந்த துணை பேராசிரியர் பிருந்தா கலந்து கொண்டு இயற்கை வேளாண்மையின் முக்கியத்துவம் குறித்து பேசினார். இந்த பயிற்சி முகாமில் வேளாண்மை கல்லூரி பயிற்சி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement