30 பவுன் திருட்டு ஒருவர் கைது

காரியாபட்டி : விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி பெரியார்நகரில் சில நாட்களுக்கு முன் ஒரு வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்து 30 பவுன் நகைகளை மர்மநபர்கள் திருடி சென்றனர்.

இன்ஸ்பெக்டர் விஜய காண்டீபன் தலைமையில் தனிப்படை போலீசார் அவர்களை தேடி வந்தனர். இந்நிலையில் விருதுநகர் - சிவகாசி ரோட்டில் சந்தேகப்படும்படி நின்ற வெம்பக்கோட்டையைச் சேர்ந்த வெங்காய வியாபாரி கணேசனை 30, போலீசார் விசாரித்த போது காரியாபட்டி நகை திருட்டில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டார். அவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்த 16 பவுன் நகைகளை மீட்டனர்.

அவருடன் இணைந்து திருட்டில் ஈடுபட்ட மற்றொருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisement