குன்றத்து கோயிலில் சிவராத்திரி காப்பு கட்டு

திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் உப கோயிலான அங்காள பரமேஸ்வரி குருநாத சுவாமி கோயிலில் மகா சிவராத்திரி, பாரிவேட்டை திருவிழாவிற்கான முகூர்த்தகால் நடப்பட்டு சுவாமிகளுக்கு காப்பு கட்டப்பட்டது.
நேற்று காலையில் அபிஷேகம், பூஜை முடிந்து மூலவர்கள் அங்காள பரமேஸ்வரி, குருநாத சுவாமிக்கு சிறப்பு அலங்காரமானது. பின்பு மூலவர்கள் மற்றும் 21 பரிவார தெய்வங்களுக்கு காப்பு கட்டப்பட்டது.
நந்தி மண்டபத்தின் மேல் தர்ப்பைப்புல் கட்டி மாலை அணிவித்து தீபாராதனை நடந்தது. திருவிழா நடக்கும் 12 நாட்களிலும் தினம் பூஜை நடக்கும். பிப். 24ல் கப்பரை பூஜை, பிப். 26ல் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் எழுந்தருளியிருக்கும் அங்காள பரமேஸ்வரி அம்மன், குருநாதசுவாமி கோயிலுக்கு புறப்பாடாகி அங்கு ஒரு வாரம் பூஜை, பாரிவேட்டை, பூப்பல்லக்கு முடிந்து மீண்டும் கோயிலுக்கு திரும்புவார்.
மேலும்
-
ரூ.1,141 கோடியில் அமைக்கப்பட்ட செங்கல்பட்டு - தி.மலை இணைப்பு சாலை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்
-
கல்வி நிறுவனங்களில் ஜாதி பெயர்கள் நீக்கப்படுமா: அரசு விளக்கம் தர உத்தரவு அரசு விளக்கம் அளிக்க உத்தரவு
-
'ஸ்மார்ட்' மீட்டர் கொள்முதலுக்கு ஒப்புதல்
-
சாம்சங் தொழிலாளர் போராட்டத்தால் முதலீட்டாளர்கள் அச்சம்
-
50 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.7,360 உயர்வு
-
அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி