கழிவுநீர் கால்வாய் கோரி மனு
கழிவுநீர் கால்வாய் கோரி மனு
கிருஷ்ணகிரி:சூளகிரி, தியாகராசனப்பள்ளி பஞ்., மாதரசனdபள்ளியை சேர்ந்த, 20க்கும் மேற்பட்டோர் கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் அளித்த கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளதாவது:
எங்கள் கிராமத்தில் கழிவு நீர் கால்வாய் இல்லை. தெருக்களின் கழிவு நீர் வழிந்தோடுகிறது. பள்ளி மாணவர்கள், முதியவர்கள், கர்ப்பிணிகள் கழிவுநீரை கடந்து செல்லும் சூழல் உள்ளது. கழிவு நீர் கால்வாய் கோரி கடந்த, 2024, பிப்., 16ல் கலெக்டர் அலுவலகத்திலும், ஜூன், 14ல் தமிழக முதல்வரின் தனி பிரிவுக்கும் மனுக்கள் அளித்தும், பயனில்லை. கழிவு நீர் சாலைகளில் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. கொசு உற்பத்தி அதிகரித்து, நோய் ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே, எங்கள் பகுதிக்கு உடனடியாக கழிவுநீர் கால்வாய் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
'அழகாக இருக்கிறீர்கள்' என்று மெசேஜ் அனுப்பினாலே குற்றம்: மும்பை நீதிமன்றம்
-
இந்தியா-பாக்., மோதல்... 'வின்னர்' யார்: கங்குலி, அப்ரிதி கணிப்பு எப்படி
-
பெங்களூருவை வீழ்த்தியது மும்பை: கடைசி ஓவரில் 'திரில்' வெற்றி
-
சரத்கமல், போபண்ணா நீக்கம் * மத்திய விளையாட்டு அமைச்சகம் 'ஷாக்'
-
இந்தியா உலக சாதனை * ஆசிய கோப்பை வில்வித்தையில்...
-
கோலிக்கு கும்ளே 'அட்வைஸ்'
Advertisement
Advertisement