மாணவிக்கு திருமணம்வாலிபர் மீது போக்சோ


மாணவிக்கு திருமணம்வாலிபர் மீது போக்சோ


அரூர்: அரூரை சேர்ந்த, 17 வயது மாணவி, அரசு பள்ளியில், பிளஸ் 1 படித்து வருகிறார். அவரை பிரேம்நாத், 22, என்ற வாலிபர், கடந்த, 2 ஆண்டுகளாக காதலித்து வந்தார். இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்தனர். இதில் மாணவி, கர்ப்பமானதால் கடந்த, 3ல் இருவரும் பேதாதம்பட்டி முருகர் கோவிலில் திருமணம் செய்து கொண்டு, தனியாக வசித்தனர். இந்நிலையில், 5 மாதம் கர்ப்பமாக இருந்த மாணவி பரிசோதனைக்கு, அரூர் அரசு மருத்துவமனை சென்றார். மாணவி கர்ப்பம் குறித்து, மருத்துவமனை நிர்வாகம், அரூர் அனைத்து மகளிர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தது. அதன் படி, பிரேம்நாத் மீது போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement