குண்டுகுளம் -- விப்பேடு இடையே 4 கி.மீ.,க்கு புதிதாக சாலை அமைப்பு

விப்பேடு:காஞ்சிபுரம் ஒன்றியம், குண்டுகுளம் கிராமத்தில் இருந்து விப்பேடு செல்லும் செல்லும் சாலை 4 கி.மீ., நீளமுடையது. இச்சாலை வழியாக செவிலிமேடு, கீழம்பி, பெரும்பாக்கம், கீழ்கதிர்பூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிக்கு செல்வோர் சென்று வருகின்றனர்.


கடந்த ஆண்டு ஐந்து ஆண்டுகளுக்கு முன் இச்சாலை புதிதாக அமைக்கப்பட்டது. இந்நிலையில், மழையின் காரணமாக பல்வேறு இடங்களில் சேதமடைந்த இச்சாலையை சீரமைக்க வேண்டும் என, கோரிக்ககை எழுந்தது. இதையடுத்து மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில், மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ், குண்டுகுளம் - விப்பேடு இடையே புதிதாக சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது.

Advertisement