இ-நாம் முறையில் பருத்தி ஏலம்
தேனி : தேனி வேளாண் விற்பனை கூட்டத்தில் மக்காச்சோளம், கொப்பரை தேங்காய், கம்பு உள்ளிட்டவை இநாம் முறையில் ஏலம் விடப்பட்டு வருகிறது.
விவசாய விளை பொருட்களுக்கு நல்ல விலை கிடைப்பதால் விவசாயிகளும் வேளாண் விற்பனை நிலையத்தை நாடி வருகின்றனர்.
நேற்று (பிப்.,17) முதன்முறையாக 249 கிலோ பருத்தி ஏலத்திற்கு கொண்டு வரப்பட்டது. இதை வாங்க இநாம் முறையில் 5 வியாபாரிகள் ஏலத்தில் பங்கேற்றனர். கிலோ ரூ. 62.70 என மொத்தம் 15,612க்கு விற்பனையானது.
விவசாயிகள் தங்கள் வேளாண் விளை பொருட்களை விற்பனை செய்ய பெரியகுளம் ரோடு தேனி வேளாண் ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தை நேரில் அணுகலாம்.
அல்லது 99766 30746 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கண்காணிப்பாளர் திருமுருகன் தெரிவித்தார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement