அரசு வீடுகள் கட்டும் திட்டத்திற்கு இருளஞ்சேரியில் மின்சாரம் திருட்டு

இருளஞ்சேரி:திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்துார் ஒன்றியம், இருளஞ்சேரி ஊராட்சியில், பழங்குடியின மக்களுக்கு, தமிழக அரசு சார்பில், வீடுகள் கட்டும் திட்டம் 2022 - 23ம் ஆண்டு, தலா, 4.30 லட்சம் ரூபாய் மதிப்பில் 30 வீடுகளுக்கு மொத்தம், 1.20 கோடி மதிப்பில் கட்டும் பணி நடந்து வருகிறது.

இதையடுத்து, நரசிங்கபுரம் செல்லும் சாலையோரம் நீர் வரத்து கால்வாய் அருகே வீடுகள் கட்டும் பணி விறுவிறுவென நடந்து வருகிறது.

இந்த வீடு கட்டும் பணிக்காக, இப்பகுதி வழியே செல்லும் மின்கம்பியில் இருந்து கொக்கி போட்டு மின்சாரம் திருடி, கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன. இது அப்பகுதி வழியே வாகனங்களில் செல்பவர்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இப்பகுதியில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுகக வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து, மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், 'இருளஞ்சேரி பகுதியில் ஆய்வு செய்து கொக்கி போட்டு மின்சாரம் திருடுவதாக கண்டுபிடிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என தெரிவித்தார்.

Advertisement