திறப்பு விழாவிற்கு காத்திருக்கும் மெதுார் நுாலகம்

பொன்னேரி:பொன்னேரி அடுத்த, மெதுார் ஊர்புற நுாலகம், பழைய அங்கன்வாடி மைய கட்டடத்தின் ஒரு பகுதியில் செயல்படுகிறது. இந்த கட்டடம் பழுதடைந்தால், மழைக்காலங்களில் புத்தகங்கள் மழையில் நனைந்து வீணாகின.
மேலும், நுாலகத்திற்கு வரும் வாசகர்களுக்கும் போதிய இடவசதி இல்லாத நிலை ஏற்பட்டது. அதை தொடர்ந்து, வாசகர்களின் தொடர் கோரிக்கையின் பயனாக, தமிழ்நாடு நுாலக ஆணைக் குழு வாயிலாக, 22 லட்சம் ரூபாயில் புதிய கட்டடம் கட்டப்பட்டது. அங்கு தேவையான வசதிகள் ஏற்படுத்தப்பட்டன.
புதிய கட்டடம் அமைந்து, நான்கு மாதங்கள் ஆன நிலையில், இதுவரை பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படாமல் திறப்பு விழாவிற்கு காத்திருக்கிறது. தற்போது நுாலகம் பழுதடைந்த பழைய கட்டடத்தில் தொடர்ந்து இயங்கி வருகிறது.
இதனால், வாசகர்களின் சிரமமும் தொடர்கிறது. இங்கு, 15,000க்கும் மேற்பட்ட புத்தகங்கள் இருப்பதால், வாசகர்கள் தினமும் நுாலகத்திற்கு வந்து செல்கின்றனர்.
வாசகர்களின் சிரமம் கருதியும், புத்தகங்களை பாதுகாப்பாக வைத்திருக்கவும், புதிய கட்டடத்தை உடனடியாக பயனுக்கு கொண்டு வரவேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
மேலும்
-
மகளிர் நில உடைமை திட்டம் கூடுதல் நிதி ஒதுக்குமா அரசு?
-
முதல்வர் பிறந்த நாள் கொட்டிவாக்கத்தில் 28ல் பொதுக்கூட்டம்
-
தேசிய பாரா தடகள போட்டியில் ஏராளமான குளறுபடிகள் விளையாட்டு வீரர்களுக்கு குடிநீர் கூட தரப்படவில்லை
-
வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
-
சீர்மரபினர் நலவாரிய உதவிக்கு விண்ணப்பிக்கலாம்
-
மின்மாற்றியில் சிக்கிய கால்பந்து சிறுவன் பலி; ஒருவர் படுகாயம்