தேனியில் தரைப்பாலம் பணி தாமதம் போக்குவரத்து நெருக்கடி அதிகரிப்பு

தேனி : தேனி பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே அமைக்கப்பட்டு வரும் தரைப்பாலம் பணி நிறைவு செய்வதில் தாமதம் ஏற்படுவதால் போக்குவரத்து நெருக்கடியில் மக்கள் தவிக்கின்றனர்.
தேனி பழையபஸ் ஸ்டாண்ட் அருகே கம்பம் ரோட்டில் ராஜவாய்க்காலில் பழைய பாலம் 21 மீ.,நீளம் 4 மீ., அகலத்தில் இருந்தது. இதனை ரூ.30லட்சம் செலவில் தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் ஜன.,2ல் சீரமைக்கும் பணி துவங்கியது. இதில் ஒருபகுதியை அகற்றி பணிகள் துவங்கியது. மற்றொரு பகுதியில் வாகன போக்குவரத்திற்கு பயன்படுகிறது. இந்நிலையில் பணி நடந்த பகுதியில் பெரும்பாலான பணி நிறைவடைந்தது. இந்நிலையில் மீண்டும் 3 அடி நீளம் நீட்டிக்கப்படுகிறது.
வேலை துவங்கி 50 நாட்கள் ஆனநிலையிலும் ஒரு பகுதியில் கூட பணி நிறைவு பெறவில்லை. இதனால் தரைப்பால பணி நிறைவடைய மேலும் நாட்கள் அதிகரிக்கும் என்பதால் பொதுமக்கள், வாகனஓட்டிகள் கவலையடைந்துள்ளனர். விரைந்து பணியை முடிக்க வலியுறுத்தி உள்ளனர்.
தேசிய நெடுஞ்சாலைத்துறை உதவிப்பொறியாளர் ரம்யா கூறுகையில், பாலம் பணியில் தற்போது நீட்டிக்கப்படும் பகுதியில் கழிவு நீர் செல்லும் வகையில் இடம் விடப்பட்டிருந்தது.
பாலத்தின் கிழக்கு பகுதியில் பணியை முடித்து விட்டு மேற்கு பகுதியில் பணி நீட்டிப்பு செய்ய இருந்தோம். ஆனால், போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கும் நீட்டிப்பு பணியை தொடர்கிறோம் என்றார்.
மேலும்
-
அரசு வீடுகள் கட்டும் திட்டத்திற்கு இருளஞ்சேரியில் மின்சாரம் திருட்டு
-
வேண்பாக்கம் ஏரியை துார்வாரி சீரமைக்க கோரிக்கை
-
வேலஞ்சேரி அரசு பள்ளி நுழைவு பகுதியில் ஏரியின் உபரிநீர் செல்வதால் மாணவர்கள் அவதி
-
டெண்டர் பங்கீட்டில் அடிதடி டவுன் பஞ்., அலுவலகம் சூறை
-
துணை முதல்வர் நிகழ்ச்சியில் தி.மு.க., நிர்வாகி டிரவுசர் கிழிப்பு
-
'கேஸ்' நடத்த காசில்லையாம்! செயின் பறித்தவர் சிக்கினார்