தென்னை மரங்களை சேதப்படுத்திய யானை

கடமலைக்குண்டு : கடமலைக்குண்டு அருகே வனப்பகுதியை ஒட்டி உள்ள விவசாய நிலத்தில் புகுந்த ஒற்றை யானை 20க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை சேதப்படுத்தி உள்ளது.


கடமலைக்குண்டு கரட்டுப்பட்டி அருகே மூங்கில் மலை அடிவாரத்தில் கடமலைக்குண்டைச் சேர்ந்த ஆசிரியர் பழனி என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் நேற்று முன்தினம் இரவில் புகுந்த ஒற்றை யானை பலன் தரும் நிலையில் இருந்த 20க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை சாய்த்து சென்றுள்ளது. இதுகுறித்து பழனி கொடுத்த புகாரில் வனத்துறையினர் சேதம் அடைந்த தோட்டத்தை பார்வையிட்டனர். அரசின் நிவாரணத்திற்கு விண்ணப்பிக்க அறிவுறுத்தி உள்ளனர்.

Advertisement