பதிவாளர் நேர்முகத்தேர்வு நிறுத்த அரசுக்கு வலியுறுத்தல்

ஓமலுார்: பெரியார் பல்கலை பதிவாளர், தேர்வாணையர் நேர்முகத்தேர்வை தடுத்து நிறுத்த, தமிழக அரசுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து அகில இந்திய பல்கலை மற்றும் கல்லுாரி ஆசிரியர் கூட்டமைப்பு செயற்குழு உறுப்பினர் வைத்தியநாதன், நேற்று தமிழக அரசுக்கு அனுப்பிய கடிதம்: சேலம் பெரியார் பல்கலை துணைவேந்தர் ஜெகநாதன் பதவி காலம், வரும் மே, 19ல் முடிகிறது. இதனால், 3 மாதங்களுக்கு முன், எந்த பணி நியமனம், கொள்கை முடிவை, பல்கலை நிர்வாகம் மேற்கொள்ள கூடாது என, தமிழக அரசின் முதன்மை செயலர், அனைத்து பல்கலைகளுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

ஆனால் துணைவேந்தர் ஜெகநாதன் வரும் மார்ச் 1ல், பதிவாளர், தேர்வாணையர் பதவிகளுக்கு நேர்முகத்தேர்வு நடத்த திட்டமிட்டுள்ளார். இது கண்டனத்துக்குரியது. அதனால் தமிழக அரசு தலையிட்டு, நேர்முகத்தேர்வை தடுத்த நிறுத்த வேண்டும். மேலும் கொள்கை முடிவு, பணி நியமனம், பதவி உயர்வு உள்ளிட்டவற்றை எடுக்க, துணைவேந்தர் ஜெகநாதனுக்கு, தமிழக அரசு தடை விதிக்க வேண்டும்.

Advertisement