இயற்கை உரங்கள் நன்மை என்ன?
பனமரத்துப்பட்டி: பனமரத்துப்பட்டி வேளாண் உதவி இயக்குனர் சாகுல் அமீத் அறிக்கை: இயற்கை உரங்களில், பயிர்களுக்கு வேண்டிய எல்லா சத்துகளும் உள்ளன. மண்ணில் வாழும் பல வகை நுண்ணுயிர்களுக்கு, இயற்கை உரங்கள் உணவாக அமைகின்றன. நல்ல காற்றோட்டம், வடிகால் வசதி ஏற்படுவதால் பயிர் நன்கு செழித்து வளர வாய்ப்பு ஏற்படுகிறது. மண்ணில் ஈரத்தன்மை அதிகரித்து பயிர்கள் நன்கு வளர உதவுகின்றன.
இயற்கை உரங்கள் நிலத்தில் போர்வையாக அமைந்து, மண்ணில் நீர் ஊடுருவும் தன்மையை அதிகரிக்கிறது. மண் இறுக்கத்தை குறைக்கும். நிலப்போர்வையாக பயன்பட்டு நிலத்தில் இருந்து நீர் ஆவியாகி வீணாவதை தடுக்கிறது. மண்ணில் வெப்பநிலையை பாதுகாக்கிறது. மண்ணில் கிடைக்காத நிலையில் உள்ள சத்துகளை கரைத்து, செடிக்கு கிடைக்க செய்கிறது. மண்ணில் ஏற்படும் ரசாயன மாற்றங்களை சரிகட்ட உதவுகிறது. களர் உவர் நிலங்களை சீர்திருத்துகிறது. பயிர்களின் தரத்தை உயர்த்துகிறது.
மேலும்
-
திறப்பு விழாவிற்கு காத்திருக்கும் மெதுார் நுாலகம்
-
அரசு வீடுகள் கட்டும் திட்டத்திற்கு இருளஞ்சேரியில் மின்சாரம் திருட்டு
-
வேண்பாக்கம் ஏரியை துார்வாரி சீரமைக்க கோரிக்கை
-
வேலஞ்சேரி அரசு பள்ளி நுழைவு பகுதியில் ஏரியின் உபரிநீர் செல்வதால் மாணவர்கள் அவதி
-
டெண்டர் பங்கீட்டில் அடிதடி டவுன் பஞ்., அலுவலகம் சூறை
-
துணை முதல்வர் நிகழ்ச்சியில் தி.மு.க., நிர்வாகி டிரவுசர் கிழிப்பு