'வீடு தோறும் நுாலகம்' விருது கலெக்டர் ஆஷா அஜித் தகவல்
சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தில் சொந்த இல்லங்களில் நுாலகம் வைத்து சிறப்பாக பராமரிப்பவர்களுக்கு விருது வழங்கப்படும் என கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது, அரசு வீடு தோறும் நுாலகம் அமைக்கும் நோக்குடன், புத்தக கண்காட்சி நடத்தி வருகிறது. வீடு தோறும் நுாலகத்தை சிறப்பாக செயல்படுத்துவோருக்கு விருது வழங்கப்படும்.
மாவட்ட நுாலக அலுவலர் தலைமையில் குழு அமைத்து, சிறந்த நுாலகத்தை தேர்வு செய்வார்கள். தேர்வு செய்யப்படுவோருக்கு பிப்., 21 முதல் மார்ச் 2 வரை சிவகங்கை மன்னர் மேல்நிலை பள்ளி வளாகத்தில் நடக்க உள்ள புத்தக கண்காட்சியில் 'சொந்த நுாலகத்திற்கான விருது' வழங்கப்படும். இதற்காக ரூ.3,000 ரொக்கம், கேடயம், சான்று வழங்கப்படும்.
எனவே வீடு தோறும் நுாலகம் அமைத்து பராமரித்து வரும் புத்தக ஆர்வலர்கள் நுால்களின் எண்ணிக்கை, வகை, அரியவகை நுால்கள் விபரங்களை பெயர், முகவரி, அலைபேசி எண்ணுடன் dlosivagangai01@gmail.com என்ற முகவரிக்கோ, மாவட்ட நுாலக அலுவலர், மாவட்ட நுாலகம், மஜீத் ரோடு, சிவகங்கை என்ற முகவரிக்கோ பிப்., 25 ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும், என்றார்.