கொலையாளிக்கு அடைக்கலம் கணவன், மனைவிக்கு 'கம்பி'

நத்தம்:கொலையாளிக்கு அடைக்கலம் கொடுத்த மதுரையை சேர்ந்த கணவன், மனைவியை போலீசார் கைது செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே விளாம்பட்டியை சேர்ந்தவர் லட்சுமணன், 48. இவரது மனைவி சங்கீதா, 35. சங்கீதாவை, பிப்., 8ல் லட்சுமணன் தம்பி சுரேஷ் வெட்டிக் கொலை செய்து தலைமறைவானார்.

தனிப்படை போலீசார் சுரேஷை தேடிய நிலையில், அவர், மதுரை அழகர்கோவில், வலையபட்டி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இருப்பதாக தகவல் கிடைத்தது.

தொடர்ந்து, அந்த வீட்டிற்கு சென்ற போலீசார், அங்கிருந்த சித்திரையன், 39, அவரது மனைவி பரமேஸ்வரி, 37, ஆகியோரை விசாரித்தனர். இவர்கள், உறவினரான சுரேஷை தங்கள் வீட்டில் இரு நாட்கள் தங்க வைத்து, சென்னைக்கு ரயிலில் ஏற்றி விட்டுள்ளனர்.

இருவரையும் கைது செய்த போலீசார், நத்தம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். சுரேஷை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisement