சம்பளம் தராத விரக்தி ஆசிரியை தற்கொலை

திருவனந்தபுரம்,:சம்பளம் இன்றி, ஐந்து ஆண்டுகளாக பணியாற்றிய அரசு உதவி பெறும் தனியார் பள்ளி ஆசிரியை தற்கொலை செய்து கொண்டார்.

கேரள மாநிலம், கோழிக்கோடு அருகே தாமரைசேரியைச் சேர்ந்தவர் அலீனா பென்னி, 29; அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றினார்.

ஐந்து ஆண்டுகளாக இவருக்கு சம்பளம் வழங்கப்படவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த அவர், படுக்கை அறையில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement