தரமற்ற 12 டன் ரேஷன் அரிசி திருப்பி அனுப்ப உத்தரவு
தரமற்ற 12 டன் ரேஷன் அரிசி திருப்பி அனுப்ப உத்தரவு
கிருஷ்ணகிரி:தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், கிருஷ்ணகிரி மண்டல கட்டுப்பாட்டில் செயல்படும் கிருஷ்ணகிரி வட்ட செயல்முறை கிடங்கில், பொது வினியோக திட்டத்திற்காக இருப்பு வைக்கப்பட்டுள்ள உணவு பொருட்களை, மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் ஆய்வு செய்தார்.
பொது வினியோக திட்டத்திற்கு வழங்க, தனியார் அரவை முகவர் ஆலையிலிருந்து வரப்பெற்ற புழுங்கல் அரிசியை (பொது ரகம்) ஆய்வு மேற்கொண்டார். இருப்பில் இருந்த, 12 டன் அரிசி வணிக தரத்துடன் இல்லாததால் அதை மீண்டும் தொடர்புடைய அரவை முகவர் ஆலைக்கு அனுப்பி, வணிக தரத்துடன் அரவை செய்து, மீண்டும் சமர்ப்பிக்க அறிவுறுத்தினார். இதையடுத்து, தனியார் அரவை முகவர் ஆலைக்கு, 12 டன் அரிசி திருப்பி அனுப்பப்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கைத்தறி, கைவினை பொருட்கள் ஆழ்வார்பேட்டையில் விற்பனை
-
மகளிர் நில உடைமை திட்டம் கூடுதல் நிதி ஒதுக்குமா அரசு?
-
முதல்வர் பிறந்த நாள் கொட்டிவாக்கத்தில் 28ல் பொதுக்கூட்டம்
-
தேசிய பாரா தடகள போட்டியில் ஏராளமான குளறுபடிகள் விளையாட்டு வீரர்களுக்கு குடிநீர் கூட தரப்படவில்லை
-
வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
-
சீர்மரபினர் நலவாரிய உதவிக்கு விண்ணப்பிக்கலாம்
Advertisement
Advertisement