சீர்மரபினர் நலவாரிய உதவிக்கு விண்ணப்பிக்கலாம்

கோவை:தமிழ்நாடு சீர்மரபினர் நல வாரியம் வழங்கும் நலத்திட்ட உதவிகளை, தகுதியுள்ளவர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.

கலெக்டர் பவன்குமார் அறிக்கை:

தமிழ்நாடு சீர்மரபினர் நல வாரியம் சீரிய முறையில் செயல்பட்டு வருகிறது.

இவ்வாரியத்தில் பதிவு பெற்ற உறுப்பினர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள், வழங்கப்பட்டு வருகிறது. விபத்து ஈட்டுறுதி திட்டம், இயற்கை மரணம், ஈமச்சடங்கு செலவு, கல்வி, திருமணம், மகப்பேறு, மூக்குகண்ணாடி, முதியோர் ஓய்வூதியம் ஆகியவற்றிற்கான உதவியை பெற, சீர்மரபினர் இனத்தை சேர்ந்தவர்கள், 18 வயது முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும்.

சுயதொழில் அல்லது தனிநபர் கூலித்தொழில் செய்பவர்கள், இவ்வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்து, நலத்திட்ட உதவிகளை பெறலாம்.

ஏற்கனவே உறுப்பினராக பதிவு செய்தவர்கள், தங்களது உறுப்பினர் பதிவினை விரைவில் புதுப்பித்துத்கொள்ள, கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம்.

அனைத்து தாலுகாக்களில் உள்ள கிராம நிர்வாக அலுவலர் அலுவலகங்களில், புதிய உறுப்பினர் சேர்க்கைக்கான முகாம் இன்று (சனிக்கிழமை) நடக்கிறது. இதில் தகுதியான நபர்கள், உரிய சான்றுகளுடன் விண்ணப்பிக்கலாம்.

இவ்வாறு, கலெக்டர் கூறியுள்ளார்.

Advertisement