புது பஸ் ஸ்டாண்ட்விரிவாக்கம் அவசியம்


புது பஸ் ஸ்டாண்ட்விரிவாக்கம் அவசியம்


சேலம்:மா.கம்யூ., சேலம் மாநகர செயலர் பிரவீன்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள், நேற்று, கலெக்டர், மாநகராட்சி கமிஷனர் அலுவலகங்களில் அளித்த மனு: சேலம் புது பஸ் ஸ்டாண்டில் இருந்து, 1,000க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகின்றன. தினமும், 40,000 முதல், 90,000 பயணியர் வரை சென்று வருகின்றனர். விடுமுறை நாட்களில் கூட்ட நெரிசல், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது மக்கள் தொகை, வாகன பெருக்கம் ஆகியவற்றுக்கு ஏற்ப, பஸ் ஸ்டாண்ட் விரிவாக்கம் செய்ய வேண்டும்.

Advertisement