ஆசிரியரை கொடூரமாக தாக்கி பணம் பறித்த சிறார்கள் சிக்கினர்
கிருஷ்ணகிரி:ஆசிரியரை கொடூரமாக தாக்கி, மொபைல், பணத்தை பறித்த மூன்று சிறுவர்களை போலீசார் கைது செய்தனர்.
காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர் டேவிட்ராஜன், 57; தனியார் பள்ளி ஆசிரியர். இவர், கிருஷ்ணகிரியிலுள்ள தன் நண்பர் வீட்டிற்கு கடந்த 18ல் வந்து விட்டு, காஞ்சிபுரம் திரும்ப, பஸ் ஸ்டாண்டிற்கு நடந்து சென்றார். நள்ளிரவு 2:00 மணியளவில், பெங்களூரு சாலையில் சென்ற போது, அங்கு நின்றிருந்த மூன்று சிறுவர்கள், அவரை கல்லால் முகத்தில் கொடூரமாக தாக்கி, அவரிடமிருந்து மொபைல்போன், பணத்தை பறித்து தப்பினர்.
அவ்வழியே ரோந்து சென்ற போலீசார், டேவிட்ராஜனை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவனையில் சேர்த்தனர். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. கிருஷ்ணகிரி டவுன் போலீசார், டேவிட்ராஜனை தாக்கிய 13, 15 மற்றும், 16 வயதுடைய, மூன்று சிறுவர்களை கைது செய்து, சேலம் கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்பினர்.
மேலும்
-
கைத்தறி, கைவினை பொருட்கள் ஆழ்வார்பேட்டையில் விற்பனை
-
மகளிர் நில உடைமை திட்டம் கூடுதல் நிதி ஒதுக்குமா அரசு?
-
முதல்வர் பிறந்த நாள் கொட்டிவாக்கத்தில் 28ல் பொதுக்கூட்டம்
-
தேசிய பாரா தடகள போட்டியில் ஏராளமான குளறுபடிகள் விளையாட்டு வீரர்களுக்கு குடிநீர் கூட தரப்படவில்லை
-
வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
-
சீர்மரபினர் நலவாரிய உதவிக்கு விண்ணப்பிக்கலாம்