விபத்து வாகனத்தை அகற்றுவதில் அலட்சியம் திருவாலங்காடு வாகன ஓட்டிகள் திக்... திக்

திருவாலங்காடு:திருவாலங்காடு ---- தக்கோலம் மாநில நெடுஞ்சாலையில், பி.பி.ஆர்.புரம், சக்கரமநல்லூர், கணேசபுரம், சின்னம்மாபேட்டை உட்பட 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. மேலும், கனகம்மாசத்திரம் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்தும், தினமும் இச்சாலை வழியாக சின்னம்மாபேட்டையில் அமைந்துள்ள திருவாலங்காடு ரயில் நிலையத்திற்கு ஆயிரக்கணக்கானோர் இருசக்கர வாகனத்தில் சென்று வருகின்றனர்.
கடந்த 16ம் தேதி இரவு, இச்சாலையில் கார் ஒன்று, கணேசபுரம் கால்நடை மருத்துவமனை அருகே விபத்தில் சிக்கி நின்றது.
விபத்து ஏற்பட்டு நான்கு நாட்களான நிலையில், காவல் துறையினரோ, நெடுஞ்சாலைத் துறையினரோ சாலையில் இருந்து காரை அகற்றவில்லை. கார் சாலையில் நிற்பதால் குறுகலான இச்சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் எதிரே வரும் வாகனங்களால் விபத்தில் சிக்குவோமோ என்ற அச்சத்துடன் சென்று வருகின்றனர்.
இப்பகுதியில் நடந்த மூன்று விபத்துகளில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள், சாலையில் நிற்கும் காரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
மேலும்
-
தமிழக கவர்னருக்கு எதிரான வழக்கு; எழுத்துப்பூர்வ வாதம் தாக்கல்
-
14வது மாடியிலிருந்து குதித்து பிளஸ் 2 மாணவர் தற்கொலை
-
ஸ்கூட்டர் 'சீட்'டை உடைத்து ரூ.5 லட்சம் திருடியவர் கைது
-
முன்பதிவு இல்லாத பெட்டிகளை குறைக்கவில்லை தெற்கு ரயில்வே விளக்கம்
-
'செல்ல' பூனையை தேடும் போலீசார்
-
கொசுவை கட்டுப்படுத்துங்க! மேயரிடம் நல சங்கம் மனு