நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொலை, கொள்ளைகள் சொல்கிறார் பொன் ராதாகிருஷ்ணன்
நாகர்கோவில்:''தமிழகத்தில் நாளுக்கு நாள் கொலை, கொள்ளை, பாலியல் பலாத்கார சம்பவங்கள் அதிகரித்து வருகிறது,'' என, நாகர்கோவிலில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டினார்.
அவர் கூறியதாவது: இச்சம்பவங்கள் தொடர்பான செய்திகளை முதல்வர் ஸ்டாலின் படிக்க வேண்டும். 2026 ஆண்டில் நிச்சயமாக தி.மு.க., அரசு இருக்காது. இந்த அரசு மிகப்பெரிய தோல்வியை சந்திக்கும். மக்கள் கொதித்துப்போய் இருக்கிறார்கள். தி.மு.க., கூட்டணியில் அங்க வகிக்கும் கட்சிகளே பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது. தி.மு.க., கூட்டணியில் தீர்க்க முடியாத அளவுக்கு பிரச்னைகள் இருக்கிறது. ஆனால் பா.ஜ., வந்துவிடக் கூடாது என்ற ஒற்றை கருத்தில் மட்டும் அவர்கள் ஒன்றுபட்டு உள்ளனர்.
அறிவாலயம் வரக்கூடாது என்று சொல்ல யாருக்கும் உரிமை கிடையாது. தமிழகத்தில் எந்தப்பகுதியிலும் எட்டு கோடி மக்களில் யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் சென்று வரலாம் என்றார்.
மேலும்
-
கைத்தறி, கைவினை பொருட்கள் ஆழ்வார்பேட்டையில் விற்பனை
-
மகளிர் நில உடைமை திட்டம் கூடுதல் நிதி ஒதுக்குமா அரசு?
-
முதல்வர் பிறந்த நாள் கொட்டிவாக்கத்தில் 28ல் பொதுக்கூட்டம்
-
தேசிய பாரா தடகள போட்டியில் ஏராளமான குளறுபடிகள் விளையாட்டு வீரர்களுக்கு குடிநீர் கூட தரப்படவில்லை
-
வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
-
சீர்மரபினர் நலவாரிய உதவிக்கு விண்ணப்பிக்கலாம்