கண்மாயில் பலியான சிறுமிகள் உடல் பெற்றோரிடம் ஒப்படைப்பு

இளையான்குடி:இளையான்குடி அருகே ஆழிமதுரையில் சிறுமிகள் இருவர் கண்மாயில் மூழ்கி பலியான சம்பவத்தில் நீண்ட நேர போராட்டத்திற்கு பின் சிறுமிகளின் உடல்களை பெற்றோர்கள் பெற்றுக் கொண்டனர்.
சிவகங்கை மாவட்டம் ஆழிமதுரையைச் சேர்ந்த சசிகுமார் மகள் ஷோபிதா 8, இவர் ஊராட்சி ஒன்றிய அரசு துவக்கப் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்தார். இதே ஊரைச் சேர்ந்த கண்ணன் மகள் கிறிஸ்மிகா 4, இவர் அப்பள்ளி அருகே உள்ள அங்கன்வாடி மையத்தில் பயின்றார்.நேற்று முன்தினம் காலை பள்ளி மற்றும் அங்கன்வாடியில் இருந்து காலை 10:00 மணிக்கு இருவரும் சிறுநீர் கழிப்பதற்காக பள்ளி அருகே உள்ள கண்மாய்க்கு சென்றனர். அங்கு இருவரும் மூழ்கி பலியாகினர்.
பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சிறுமிகளின் உடல்கள் இளையான்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. நேற்று காலை இளையான்குடி அரசு மருத்துவமனையில் சிறுமிகளின் பெற்றோர்கள், உறவினர்கள், கிராம மக்கள் உடல்களை வாங்காமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். எம்.எல்.ஏ.,தமிழரசி, மாவட்ட வருவாய் அலுவலர் செல்வசுரபி,கோட்டாட்சியர் விஜயகுமார், எஸ்.பி., ஆஷிஷ் ராவத், தாசில்தார் முருகன் பேச்சு வார்த்தை நடத்தினர். பின்னர் சிறுமிகளின் உடல்களை பெற்றோர் பெற்றுக் கொண்டனர்.
எச்.ராஜா ஆவேசம்
சிறுமிகளின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறிய பா.ஜ., தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா கூறியதாவது: இப்பள்ளியில் கழிப்பறை வசதி இருந்தும் மாணவிகளை அங்கு செல்ல விடாமல் ஆசிரியர்கள் தடுப்பதாக புகார்கள் வந்துள்ளன. இதனால் சிறுமிகள் பரிதாபமாக பலியாகி உள்ளனர். கள்ளச்சாராயம் குடித்து பலியானவர்களுக்கு நிவாரணமாக ரூ.10 லட்சம் வழங்கப்படுகிறது. ஆனால் இச்சிறுமிகளுக்கு நிவாரணமாக ரூ.3 லட்சம் வழங்குவதை ஏற்றுக்கொள்ளமுடியாது என்றார்.
திருப்புவனத்தில் அவர் கூறியதாவது:
2023ல் தலைமைச் செயலாளராக இருந்தவர் தேசிய கல்வி கொள்கைக்கான 3 மற்றும் 4 வது கட்ட நிதியை விடுவிக்குமாறும், இத்திட்டத்தை செயல்படுத்த தயாராக இருப்பதாக கடிதம் எழுதியுள்ளார்.
அப்படி என்றால் முதல் மற்றும் இரண்டாம் கட்டத்தை ஏற்று கொண்டதாக தானே அர்த்தம். தமிழ்நாட்டிற்கான எந்த நிதியும் நிறுத்தப்படவில்லை.
சமச்சீர் கல்வியை கொண்டு வந்தது கருணாநிதி தானே, ஏன் தி.மு.க.,வினர் தங்கள் குழந்தைகளை சமச்சீர் கல்வி திட்டத்தில் படிக்க வைக்கவில்லை. நாங்கள் நினைத்தால் தி.மு.க., ஆட்சிக்கே கெட் அவுட் சொல்லி விடுவோம் என்றார்.
மேலும்
-
ஊனமாஞ்சேரி புது சமுதாயக்கூடம் ஓராண்டாக திறக்காததால் அதிருப்தி
-
திருப்பரங்குன்றத்தில் ஜமாத் ஊர்வலம்: மனு தள்ளுபடி
-
ரூ.180 கோடி; 90 ஏக்கர்; ரூ.1,000க்கு லீஸ் திரைத்துறையினருக்கு அன்பு பரிசு; அரசு சாதனை
-
குப்பை தரம் பிரிப்பு விழிப்புணர்வு
-
கோவில் வளாகம் அருகே கழிவுநீர் தேங்குவதால் அவதி
-
கனியாமூர் பள்ளி கலவர வழக்கு; விழுப்புரம் கோர்ட்டில் 37 சிறார்கள் ஆஜர்