பெங்களூருவை வீழ்த்தியது மும்பை: கடைசி ஓவரில் 'திரில்' வெற்றி

பெங்களூரு: பெண்கள் பிரிமியர் லீக் போட்டியில் மும்பை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் கடைசி ஓவரில் பெங்களூருவை வீழ்த்தியது.
இந்தியாவில், பெண்களுக்கான பிரிமியர் லீக் 3வது சீசன் நடக்கிறது. பெங்களூருவில் நடந்த லீக் போட்டியில் 'நடப்பு சாம்பியன்' பெங்களூரு, மும்பை அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற மும்பை அணி 'பீல்டிங்' தேர்வு செய்தது.
பெங்களூரு அணிக்கு கேப்டன் ஸ்மிருதி மந்தனா (26) சுமாரான துவக்கம் கொடுத்தார். எல்லிஸ் பெர்ரி (81) அரைசதம் கடந்து கைகொடுத்தார். ரிச்சா கோஷ் (28) ஆறுதல் தந்தார். பெங்களூரு அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 167 ரன் எடுத்தது. மும்பை அணி சார்பில் அமன்ஜோத் கவுர் 3 விக்கெட் வீழ்த்தினார்.
எட்டக்கூடிய இலக்கை விரட்டிய மும்பை அணிக்கு நாட் சிவர்-புருன்ட் (42), கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் (50) நம்பிக்கை தந்தனர். கடைசி ஓவரில் வெற்றிக்கு 6 ரன் தேவைப்பட்டது. முதல் 4 பந்தில், 4 ரன் கிடைத்தது. ஐந்தாவது பந்தை பவுண்டரிக்கு விரட்டிய கமலினி வெற்றியை உறுதி செய்தார்.
மும்பை அணி 19.5 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 176 ரன் எடுத்து வெற்றி பெற்றது. அமன்ஜோத் கவுர் (34), கமலினி (11) அவுட்டாகாமல் இருந்தனர்.
மேலும்
-
பாரதிதாசன் பல்கலை. பதவி உயர்வில் சமூக அநீதியை நீக்குங்கள்; அன்புமணி வலியுறுத்தல்
-
எந்த மொழிக்கும் நாம் எதிரி அல்ல; அப்பா செயலி வெளியிட்டு முதல்வர் ஸ்டாலின் பேச்சு
-
ஜி.எஸ்.டி., அதிகாரி, தாய், சகோதரி பலி; அழுகிய நிலையில் சடலங்கள் மீட்பு
-
விமானத்தில் உடைந்த இருக்கை; மத்திய அமைச்சரிடம் மன்னிப்பு கோரியது ஏர் இந்தியா
-
ஊரக வேலை உறுதி திட்டத்தில் ரூ.14 கோடி முறைகேடு: ராமதாஸ் காட்டம்
-
மாயமான கல்லூரி மாணவர் கிணற்றில் சடலமாக மீட்பு; ஒருதலை காதலா என விசாரணை