'அழகாக இருக்கிறீர்கள்' என்று மெசேஜ் அனுப்பினாலே குற்றம்: மும்பை நீதிமன்றம்

மும்பை: 'முன்பின் பழக்கமில்லாத பெண்ணுக்கு, 'நீங்கள் அழகாக இருக்கிறீர்கள்' என, நள்ளிரவில் குறுஞ்செய்தி அனுப்புவது ஆபாசமான செயலாகக் கருதப்படும். பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்தால், சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்' என, மும்பை செஷன்ஸ் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மஹாராஷ்டிர மாநிலம் மும்பையைச் சேர்ந்த முன்னாள் பெண் கவுன்சிலர் ஒருவரது, 'வாட்ஸாப்' எண்ணுக்கு, முன்பின் பழக்கமில்லாத நபரிடம் இருந்து, 2022ல் சில குறுஞ்செய்திகள் வந்தன.
நள்ளிரவில் அனுப்பப்பட்ட அந்த குறுஞ்செய்தியில், 'உங்களை எனக்கு மிகவும் பிடித்துள்ளது; நீங்கள் ஒல்லியாக, அழகாக உள்ளீர்கள்; உங்களுக்கு திருமணம் ஆகிவிட்டதா?' என்பது உட்பட அவரை வர்ணித்து சில தகவல்களும், புகைப்படங்களும் அனுப்பப்பட்டன.
இதுகுறித்து போலீசில் அந்த பெண் புகார் அளித்தார். 'மெபைல் போன்' எண் அடிப்படையில் அந்த குறுஞ்செய்தி அனுப்பிய நபரை போலீசார் மடக்கி வழக்குப்பதிவு செய்தனர்.
குற்றவாளிக்கு மும்பை மாஜிஸ்திரேட் நீதிமன்றம், மூன்று மாத சிறை தண்டனை விதித்து, 2022ல் உத்தரவிட்டது. இதை எதிர்த்து மும்பை செஷன்ஸ் நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்தார். அந்த வழக்கில் கடந்த, 18ல் தீர்ப்பளிக்கப்பட்டது.
அதன் விபரம்:
குற்றவாளி ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதற்கு மனுதாரர் தரப்பில் தகுந்த ஆதாரங்கள் தாக்கல் செய்யப்பட்டுஉள்ளன. குற்றவாளி தரப்பில் ஆதாரங்கள் எதுவும் சமர்ப்பிக்கப்படவில்லை.
மேலும், இந்த சமூகத்தில் எது ஆபாசம் என்பதை, சாமானிய மனிதரின் பார்வையில் இருந்து தான் தீர்மானிக்க வேண்டும். முன்பின் அறிமுகம் இல்லாத பெண்ணுக்கு, நள்ளிரவில், 'நீங்கள் அழகாக உள்ளீர்கள்' என, குறுஞ்செய்தி அனுப்புவது ஆபாசமான செயல்தான்.
இந்த வழக்கில், குற்றவாளிக்கு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் அளித்த தண்டனை சரியே. இவ்வாறு நீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தது.



மேலும்
-
எந்த மொழிக்கும் நாம் எதிரி அல்ல; அப்பா செயலி வெளியிட்டு முதல்வர் ஸ்டாலின் பேச்சு
-
ஜி.எஸ்.டி., அதிகாரி, தாய், சகோதரி பலி; அழுகிய நிலையில் சடலங்கள் மீட்பு
-
விமானத்தில் உடைந்த இருக்கை; மத்திய அமைச்சரிடம் மன்னிப்பு கோரியது ஏர் இந்தியா
-
ஊரக வேலை உறுதி திட்டத்தில் ரூ.14 கோடி முறைகேடு: ராமதாஸ் காட்டம்
-
மாயமான கல்லூரி மாணவர் கிணற்றில் சடலமாக மீட்பு; ஒருதலை காதலா என விசாரணை
-
கட்சிக்கு இது களையுதிர் காலம்; சீமான்