பெண்ணிடம் ரூ.20,000 ' பிக் பாக்கெட் '

சென்னை,:திருவல்லிக்கேணி, வி.ஆர்., பிள்ளை தெருவைச் சேர்ந்தவர் அனிதா, 32; தனியார் நிறுவன துாய்மை பணியாளர்.

நேற்று முன்தினம் இரவு அரசு மாநகரபேருந்தில், திருவல்லிக்கேணி ஆடம் சந்தை சாலையில் இருந்து, டாக்டர் பெசன்ட் சாலையில்உள்ள பார்த்தசாரதி கோவில் பேருந்து நிறுத்தத்தில் இறங்கினார்.

வீட்டிற்கு சென்று கைப்பையை பார்த்தார். அப்போது, அதிலிருந்த மாதாந்திர சீட்டு தொகை 20,000 ரூபாய் திருடப்பட்டிருப்பது தெரிய வந்தது.

சம்பவம் குறித்து, ஐஸ்ஹவுஸ் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement