ஜே.இ.இ., முதன்மை தேர்வில் வேலம்மாள் மாணவர்கள் சாதனை
மதுரை: இந்தாண்டிற்கான ஜே.இ.இ., முதன்மை தேர்வில் வேலம்மாள் கல்விக் குழும மாணவர்கள் தேசிய அளவில் சாதனை படைத்தனர்.
தமிழகம், புதுச்சேரியில் இயங்கி வரும் வேலம்மாள் கல்விக் குழுமத்தைச் சேர்ந்த மாணவர்கள் 70க்கும் மேற்பட்டோர் ஜே.இ.இ., முதன்மை தேர்வில் 99 சதவீதத்திற்கும் அதிகமான மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்தனர்.
கல்விக் குழும நிறுவனர் முத்துராமலிங்கம் கூறுகையில், ''வேலம்மாள் மாணவர்களை நினைத்து பெருமைப்படுகிறோம். ஜே.இ.இ., முதன்மை தேர்வில் மாணவர்களின் சாதனை, அவர்களது தொடர் முயற்சியின் பிரதிபலிப்பாகும். ஒவ்வொரு மாணவரின் தனிப்பட்ட வெற்றியையும் கொண்டாடுவதில் மகிழ்ச்சியடைகிறோம்'' என்றார். குழுமத்தின் முதன்மை செயல் அலுவலர் வேல்முருகன், தாளாளர் வேல்மோகன், இயக்குநர் சசிக்குமார் ஆகியோர் சாதனை புரிந்த மாணவர்களை வாழ்த்தினர்.
வேலம்மாள் பள்ளி மாணவர்கள் கடந்த ஆண்டுகளைப் போலவேஜே.இ.இ., முதன்மை தேர்வில் தொடர்ந்துதேசிய அளவில் சாதித்து வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும்
-
பிரதமரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த டில்லி முதல்வர் ரேகா குப்தா
-
கும்பமேளாவில் கவர்னர் ரவி, அண்ணாமலை புனித நீராடினர்
-
6 பிணைக்கைதிகளில் 2 பேரை விடுவித்தது ஹமாஸ் அமைப்பு!
-
கேரளா நக்சல் அமைப்பு தலைவன் கைது
-
சிவகாசி அருகே தீ பெட்டி ஆலையில் பயங்கர தீ; தொழிலாளிகள் உயிர் தப்பினர்!
-
தெலுங்கானாவில் சுரங்கப்பாதை இடிந்து விபத்து; தொழிலாளர்கள் 30 பேரை மீட்கும் பணி தீவிரம்