மகளிர் சுகாதார வளாகம் சீரமைக்க மருதம் கிராமத்தினர் வலியுறுத்தல்

மருதம்:வாலாஜாபாத் ஒன்றியம் மருதம் கிராமத்தில். கடந்த 2004ம் ஆண்டு ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாகம் கட்டடப்பட்டது. கிராமத்தினர் சுகாதார வளாகத்தை பயன்படுத்தி வந்தனர்.

இந்நிலையில், முறையான பராமரிப்பு இல்லாததால், சுகாதார வளாக தண்ணீர் தேவைக்காக அமைக்கப்பட்டுள்ள மின்மோட்டார் பழுதடைந்தது. பழுதடைந்த மின்மோட்டாரை சீரமைக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை.

தண்ணீர் வசதி இல்லாததால், கிராமத்தினர் சுகாதார வளாகத்தை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. இதனால், சுகாதார வளாகத்திற்கு பூட்டு போடப்பட்டு பயன்பாடின்றி வீணாகி வருகிறது.

எனவே, மின்மோட்டாரை சீரமைத்து, மகளிர் சுகாதார வளாக கட்டடத்தை முழுமையாக புதுப்பித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர மருதம் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராம வாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Advertisement