விபத்தை ஏற்படுத்தும் வேகத்தடை வெள்ளை வர்ணம் பூச வலியுறுத்தல்

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் கீரை மண்டபம் பகுதியில் இருந்து, காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகம், எஸ்.பி., அலுவலகம் மட்டுமின்றி, வந்தவாசி சாலை வழியாக பல்வேறு ஊர்களுக்கு, தினமும் ஏராளமானோர் வளத்தீஸ்வரன் கோவில் தெரு வழியாக சென்று வருகின்றனர்.

வாகன போக்குவரத்து நிறைந்த இச்சாலையில், தனியார் மருத்துமவனை அருகே, விபத்து ஏற்படுவதை தவிர்க்க வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி பராமரிப்பில் உள்ள இச்சாலையில் வேகத்தடைக்கு வெள்ளை வர்ணம் பூசப்படாமலும், ஒளி பிரதிபலிப்பான் ஒட்டப்படாமலும் உள்ளது.

இதனால், இரவு நேரத்தில் போதுமான வெளிச்சம் இல்லாத இச்சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி விழுந்து விபத்தில் சிக்குகின்றனர்.

எனவே, வேகத்தடைக்கு வெள்ளை வர்ணம் பூசுவதோடு, இரவில் ஒளிரும் வகையில், ஒளி பிரதிபலிப்பான் அமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement