நோக்கியா துணை மின் நிலையத்தில் தீ

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் -- சிங்கபெருமாள் கோவில் சாலையில், ஸ்ரீபெரும்புதுார் நோக்கியா துணைமின் நிலையம் உள்ளது. ஸ்ரீபெரும்புதுார் சிப்காட் பகுதியின் முக்கிய துணைமின் நிலையமாக உள்ளது.

இந்த துணைமின் நிலையத்தை மின்வாரிய அதிகாரிகள் முறையாக பராமரிக்காததால், செடி, கொடிகள் வளர்ந்துள்ளன. நேற்று மதியம், துணைமின் நிலைய வளாகத்தில் உள்ள காய்ந்த செடிகளில் திடீரென தீப்பற்றியது.

தீ மளமளவென பரவி கொழுந்துவிட்டு எரிய துவங்கியது. இதுகுறித்து, ஸ்ரீபெரும்புதுார் தீயணைப்பு வீரர்கள் மற்றும் தனியார் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், போராடி தீயை அணைத்தனர். மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என, போலீசார் தெரிவித்தனர்.

Advertisement