குண்டு மிளகாய் கிலோ ரூ.100 விலை வீழ்ச்சியால் விரக்தி
ராமநாதபுரம்:வரத்து அதிகரிப்பால், ராமநாதபுரம் குண்டு மிளகாய் வத்தல் விலை கிலோ, 100 ரூபாய்க்கு விற்றது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆண்டுதோறும், 20,000 ஏக்கரில் குண்டு மிளகாய் சாகுபடிநடக்கிறது. இருப்பினும்,மசாலா நிறுவனங்கள், மொத்த வியாபாரிகளிடம் நேரடியாக விற்க முடியாமல், இடைத்தரகர்களிடம் குறைந்த விலைக்கு விற்றுஅதிக கமிஷன் தர வேண்டியுள்ளது.
முதுகுளத்துார் விவசாயி நாகலிங்கம் கூறுகையில், ''புவிசார் குறியீடு பெற்ற குண்டு மிளகாய்க்கு அரசு எந்த சலுகையும் வழங்கில்லை.கடந்த மாதம் கிலோ 200 -- 250 ரூபாய் வரை விற்றது.
''இந்த மாதம் சீசன் துவங்கியுள்ள நேரத்தில், ஆந்திர வத்தல் வரத்து அதிகரிப்பால், விலை வீழ்ச்சியடைந்து கிலோ, 100 ரூபாய்க்கு நஷ்ட விலையில் வியாபாரிகளிடம் விற்க வேண்டிய நிலை உள்ளது. மிளகாய்க்கு உரிய விலை நிர்ணயம் செய்து, அரசே நேரடி கொள்முதல் செய்யவேண்டும்,'' என்றார்.
மேலும்
-
பிரதமரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த டில்லி முதல்வர் ரேகா குப்தா
-
கும்பமேளாவில் கவர்னர் ரவி, அண்ணாமலை புனித நீராடினர்
-
6 பிணைக்கைதிகளில் 2 பேரை விடுவித்தது ஹமாஸ் அமைப்பு!
-
கேரளா நக்சல் அமைப்பு தலைவன் கைது
-
சிவகாசி அருகே தீ பெட்டி ஆலையில் பயங்கர தீ; தொழிலாளிகள் உயிர் தப்பினர்!
-
தெலுங்கானாவில் சுரங்கப்பாதை இடிந்து விபத்து; தொழிலாளர்கள் 30 பேரை மீட்கும் பணி தீவிரம்