மாவட்ட போலீசார் சார்பில்முதன் முறையாக வளைகாப்பு திருவிழா
மாவட்ட போலீசார் சார்பில்முதன் முறையாக வளைகாப்பு திருவிழா
நாமக்கல்:நாமக்கல் மாவட்ட போலீசார் சார்பில், முதன் முறையாக கர்ப்பிணி போலீசாருக்கு வளைகாப்பு திருவிழா, ஆயுதப்படை சமுதாய கூடத்தில், நேற்று கோலாகலமாக நடத்தப்பட்டது.
இதில், ஜேடர்பாளையம் போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றும் எஸ்.ஐ., கதீஜாபேகம், ஆயுதப்படை இரண்டாம் நிலை பெண் காவலர் பிராத்தனா ஆகியோருக்கு, போலீசார் சார்பில் நடந்த வளைகாப்பு நிகழ்ச்சிக்கு, கூடுதல் எஸ்.பி., தனராசு தலைமை வகித்தார். கூடுதல் எஸ்.பி., சண்முகம் முன்னிலை வகித்தார். தொடர்ந்து, பெண் எஸ்.ஐ., மற்றும் தலைமை காவலர் ஆகிய இருவருக்கும், சீர்வரிசை பொருட்கள் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டன.
பின், அவர்களுக்கு வளையல் அணிவித்து, தக்காளி சாதம், புளி சாதம், எலுமிச்சை சாதம், தேங்காய் சாதம், தயிர் சாதம் என, ஐந்து வகையான உணவு வகைகளை ஊட்டிவிட்டு, வளைகாப்பு நிகழ்ச்சியை விமரிசையாக நடத்தினர்.
டி.எஸ்.பி.,க்கள் விஜயகுமார், கிருஷ்ணன், சங்கீதா, ராஜூ, இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ.,க்கள் போலீசார் மற்றும் ஆயுதப்படை போலீசார் பங்கேற்றனர்.
மேலும்
-
பிரதமரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த டில்லி முதல்வர் ரேகா குப்தா
-
கும்பமேளாவில் கவர்னர் ரவி, அண்ணாமலை புனித நீராடினர்
-
6 பிணைக்கைதிகளில் 2 பேரை விடுவித்தது ஹமாஸ் அமைப்பு!
-
கேரளா நக்சல் அமைப்பு தலைவன் கைது
-
சிவகாசி அருகே தீ பெட்டி ஆலையில் பயங்கர தீ; தொழிலாளிகள் உயிர் தப்பினர்!
-
தெலுங்கானாவில் சுரங்கப்பாதை இடிந்து விபத்து; தொழிலாளர்கள் 30 பேரை மீட்கும் பணி தீவிரம்