அரசு மகளிர் கல்லுாரியில்தேசிய அளவிலான கருத்தரங்கு


அரசு மகளிர் கல்லுாரியில்தேசிய அளவிலான கருத்தரங்கு


நாமக்கல்:நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கலை கல்லுாரியில், 'ஊட்டச்சத்து மூலம் மன அழுத்தத்தை நிர்வகித்தல்' ஒரு முழுமையான அணுகுமுறை என்ற தலைப்பில், தேசிய அளவிலான கருத்தரங்கு நேற்று நடந்தது.
கல்லுாரி முதல்வர் கோவிந்தராசு தலைமை வகித்தார். புதுச்சேரி காஞ்சி மாமுனிவர் முதுகலை படிப்பு மற்றும் ஆராய்ச்சி மைய மனையியில் துறை உதவி பேராசிரியர் கயல்விழி பாலமுருகன், 'மனநலம் மற்றும் மன அழுத்த கட்டுப்பாடுகளும்' என்ற தலைப்பில் பேசினார்.
நாமக்கல் காலநடை மருத்துவ கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலைய, பால்வள அறிவியல் துறை பேராசிரியர் பாண்டியன், 'பால் சம்பந்தமான உணவுகள் மற்றும் வாழ்க்கை முறை மூலம் மன அழுத்த கட்டுப்பாடுகள்' என்ற தலைப்பில் பேசினார். கருத்தரங்கையொட்டி, போஸ்டர் மற்றும் பேப்பர் பிரசன்டேஷன் போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது.
தர்மபுரி மண்டலத்தில் உள்ள, 11க்கும் மேற்பட்ட கல்லுாரிகளில் இருந்தும், பெரியார் பல்கலை ஆராய்ச்சி மாணவர்கள், கால்நடை மருத்துவ கல்லுாரி ஆராய்ச்சி மாணவர்கள் என, 350க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர், பேராசிரியர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை, கல்லுாரி ஊட்டச்சத்து மற்றும் உணவு கட்டுப்பாட்டியல் துறை தலைவர் சுஜாதா, துறை பேராசிரியர்கள் செய்திருந்தனர்.

Advertisement