ஜீவன்-விஜய் ஜோடி சாம்பியன்

புனே: சாலஞ்சர் கோப்பை டென்னிசில் இந்தியாவின் ஜீவன் நெடுஞ்செழியன், விஜய்சுந்தர் பிரசாத் ஜோடி சாம்பியன் ஆனது.
மகாராஷ்டிராவில் ஆண்களுக்கான சாலஞ்சர் கோப்பை டென்னிஸ் தொடர் நடக்கிறது. இரட்டையர் பிரிவு பைனலில் இந்தியாவின் ஜீவன் நெடுஞ்செழியன், விஜய்சுந்தர் பிரசாத் ஜோடி, ஆஸ்திரேலியாவின் பிளேக், கிறிஸ்டோபர் ஜோடியை சந்தித்தது.
முதல் செட்டை 3-6 என இழந்த இந்திய ஜோடி, அடுத்த செட்டை 6-3 என வென்றது. பின் சூப்பர் டைபிரேக்கரில் 10-0 என அசத்தியது. முடிவில் இந்திய ஜோடி 3-6, 6-3, 10-0 என வென்று, கோப்பை கைப்பற்றியது. ரூ. 6 லட்சம் பரிசு தட்டிச் சென்றது.

Advertisement