தமிழகத்தில் 3 நாள் மழை: 25ல் துவங்கும்

சென்னை:'தமிழகம் மற்றும் புதுச்சேரியில், அடுத்த இரண்டு நாட்களுக்கு வெப்பநிலை இயல்பை விட, இரண்டு முதல் மூன்று செல்ஷியஸ் அதிகமாக இருக்கும்' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கை:

தமிழகம் மற்றும் புதுச்சேரியில், கடந்த சில நாட்களாக வறண்ட வானிலை நிலவுகிறது. உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில், 32 முதல், 37 செல்ஷியஸ் வரையும், தமிழக கடலோர பகுதிகள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில், 30 - 35 செல்ஷியஸ் வரையும் வெயில் பதிவாகியுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வெப்ப நிலை சற்று உயரும். அதாவது, இயல்பான வெப்ப நிலையை விட, இரண்டு முதல் மூன்று செல்ஷியஸ் அதிகமாக இருக்கும்.

இருப்பினும் பிப்.25 முதல் 28ம் தேதி வரை, தமிழகம், புதுச்சேரியில் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும், நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை, 33 செல்ஷியஸ் வரை இருக்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement