ஸ்ரீவில்லிபுத்துாரில் 20 பவுன் நகை, பணம் கொள்ளை முகமூடி கொள்ளையர்கள் கைவரிசை

ஸ்ரீவில்லிபுத்துார்:விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துாரில் ஓய்வு பெற்ற மில் மேனேஜர் குப்புசாமி வீட்டில் கண்காணிப்பு கேமராக்கள், கதவுகளை உடைத்து வீட்டிற்குள் பீரோக்களை உடைத்து 20 பவுன் நகைகள், ரூ.80 ஆயிரத்தை முகமூடி அணிந்த மர்ம நபர்கள் கொள்ளையடித்தனர்.
ஸ்ரீவில்லிபுத்துார் மடவார்வளாகம் கிருஷ்ணா நகர் தெற்கு கடைசி தெருவில் வசிப்பவர் குப்புசாமி 57, ஓய்வு பெற்ற மில் மேனேஜர். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது மனைவியுடன் கோவையில் உள்ள மகன் வீட்டிற்கு சென்றார்.
நேற்று அதிகாலை 2:30 மணிக்கு இவரது வீட்டிற்குள் புகுந்த டவுசர், முகமூடி அணிந்த திருடர்கள் சிலர் வாசலில் கேமராக்களை உடைத்தும், வீட்டு கதவை உடைத்தும் உள்ளே சென்று, பெட்ரூமில் பீரோவை உடைத்து 20 பவுன் தங்க நகைகளையும், ரூ. 80 ஆயிரம் பணத்தையும் கொள்ளையடித்து சென்றனர்.
டி.எஸ்.பி. ராஜா, இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், குற்றப்பிரிவு தனிப்படை போலீஸ் குழுவினர் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். தடய அறிவியல் பிரிவு போலீசார் தடயங்களை சேகரித்தனர்.
மோப்பநாய் வரவழைக்கப்பட்டு தேடியதில் வீட்டிலிருந்து அருகிலுள்ள வயல் பகுதிக்கு சென்று விட்டு அடுத்த தெருவில் உள்ள ஆளில்லாத 2 வீடுகளுக்கும் சென்றது. அப்போதுதான் அந்த வீடுகளிலும் கொள்ளை முயற்சி சம்பவங்கள் நடந்தது தெரிய வந்தது.
சம்பவ வீட்டை பார்வையிட்ட பின்பு விருதுநகர் எஸ்.பி. கண்ணன் கூறியதாவது; நகை திருட்டு சம்பவத்தில் தடயங்கள் சேகரிக்கப்பட்டுள்ளது. கேமரா பதிவுகள் மூலம் குற்றவாளிகள் அடையாளம் கண்டறியப்பட்டுள்ளனர். விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றார்.
இதே வீட்டில் 2019ல் 19 பவுன் நகைகள் கொள்ளை போன நிலையில் தற்போது 6 ஆண்டுகள் கழித்து மீண்டும் அதே வீட்டில் கொள்ளை நடந்திருப்பது போலீசாரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
மேலும்
-
தர்மபுரி தி.மு.க., மாவட்ட செயலாளர் பதவி பறிப்பு
-
போப் உடல்நிலை கவலைக்கிடம்: வாடிகன் தகவல்
-
தெலுங்கானாவில் சுரங்கப்பாதையில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரம்
-
மொழியை வைத்து நாட்டை பிரிக்கும் அரசியல் கட்சிகள்; அண்ணாமலை காட்டம்
-
பொறுப்பற்ற அரசு ஊழியர்கள் பணி நீக்கம்; எலான் மஸ்க் எச்சரிக்கை
-
மருத்துவ மாணவர் வைப்புத்தொகை ஐந்து மாதமாக தராமல் இழுத்தடிப்பது ஏன்?