ஓசூரில் பதுங்கியிருந்த நக்சலைட் கைது
சென்னை:ஓசூரில் பதுங்கி இருந்த, நக்சல் சந்தோஷ்குமாரை, தமிழக போலீசார் உதவியுடன், கேரளா நக்சல் தடுப்புப் பிரிவு போலீசார் கைது செய்தனர்.
தமிழக - கேரள மாநில எல்லைக்கு அருகேயுள்ள, வயநாடு, மலப்புரம், கண்ணுார், பாலக்காடு வனப்பகுதிகளில் ஊடுருவி உள்ள நக்சலைட்கள், மானந்தவாடியில் ரோந்து போலீசார் மீது தாக்குதல், முக்காலி வனச்சரகர் அலுவலகம் சூறை, பாலக்காட்டில் கே.எப்.சி., உணவகம், கல் குவாரிகள் மீது தாக்குதல் என, வன்முறை செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த கும்பலுக்கு, தமிழகத்தைச் சேர்ந்த சிலர் ஆதரவு அளிப்பதும் வழிநடத்துவதும் தெரியவந்துள்ளது. பொள்ளாச்சி, ஆழியாறு பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ்குமார் 45. இவர் 2014ல் வீட்டை விட்டு வெளியேறி நக்சல் இயக்கத்தில் சேர்ந்து செயலாற்றி வந்தார்.
சமீபத்தில் கைது செய்யப்பட்ட நக்சல் இயக்க தலைவர்களான சி.பி.மொய்தீன், சோமன் ஆகியோருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தார்.
மேலும், கேரளாவின் கபினி தள நக்சல் இயக்க தலைவராகவும் இருந்தார். இவர் மீது, தமிழகம் மற்றும் கேரளாவில், 40க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. நாட்டின் இறையாண்மைக்கு எதிராக செயல்பட்டு வந்ததால், இவரை பற்றி தகவல் சொன்னால், 2 லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என, தேசிய புலனாய்வு அமைப்பான, என்.ஐ.ஏ., அறிவித்திருந்தது.
இந்நிலையில், ஓசூர் பகுதியில் மறைந்திருந்த நக்சல் சந்தோஷ்குமாரை, தமிழக போலீசார் உதவியுடன், கேரள மாநில நக்சல் தடுப்புப் பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
மேலும்
-
பாட்டும் வயலினும்...: அற்புத 'அய்யர் சகோதரிகள்'
-
தர்மபுரி தி.மு.க., மாவட்ட செயலாளர் பதவி பறிப்பு
-
போப் உடல்நிலை கவலைக்கிடம்: வாடிகன் தகவல்
-
தெலுங்கானாவில் சுரங்கப்பாதையில் சிக்கியவர்களை மீட்கும் பணி தீவிரம்
-
மொழியை வைத்து நாட்டை பிரிக்கும் அரசியல் கட்சிகள்; அண்ணாமலை காட்டம்
-
பொறுப்பற்ற அரசு ஊழியர்கள் பணி நீக்கம்; எலான் மஸ்க் எச்சரிக்கை