அரசு மேல்நிலை பள்ளிகளில் கூடுதல் கட்டடம் முதல்வர் காணொளி வாயிலாக திறந்து வைப்பு

கரூர்: மண்மங்கலம், கடவூர் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் கூடுதல் வகுப்பறை கட்டடங்களை, முதல்வர் ஸ்டாலின் காணொளி வாயிலாக திறந்து வைத்தார்.

பள்ளியில் நடந்த விழாவில், அமைச்சர் செந்தில்பாலாஜி மாணவ, மாணவியருக்கு இனிப்பு வழங்கினார்.கரூர் மாவட்டம், மண்மங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் கடவூர் அரசு மேல்நிலைப் பள்ளியில், கூடுதல் வகுப்பறை கட்ட-டங்கள் திறப்பு விழா நிகழ்ச்சி நேற்று நடந்தது. முதல்வர் ஸ்டாலின், காணொளி வாயிலாக வகுப்பறை கட்டடங்களை திறந்து வைத்தார். இதையடுத்து, மண்மங்கலம் அரசு மேல்-நிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டடத்தில், மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி குத்துவிளக்கு ஏற்றி வைத்து, மாண-வியருக்கு இனிப்பு வழங்கினார்.
கடவூர் அரசு மேல்நிலைப் பள்ளியில், 2.11 கோடி ரூபாய் மதிப்பில், 10 வகுப்பறைகள் கொண்ட கூடுதல் கட்டடத்தையும், மண்மங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில், 1.71 கோடி ரூபாய் மதிப்பில், எட்டு வகுப்பறைகள் கொண்ட கூடுதல் கட்டடம் என மொத்தம், 3.82 கோடி ரூபாய் மதிப்பிலான வகுப்பறை கட்ட-டங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளன. நிகழ்ச்சியில், கலெக்டர் தங்-கவேல், அரவக்குறிச்சி எம்.எல்.ஏ., இளங்கோ, பொதுப்பணித்-துறை (கட்டடங்கள்) செயற்பொறியாளர் சுஜாதா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுகானந்தம், மண்மங்கலம் தாசில்தார் மோகன்ராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement