சாட்சியிடம் தகராறு செய்த அரசு பெண் ஊழியர் கைது

ராசிபுரம்: ராசிபுரம் அடுத்த வெண்ணந்துாரை சேர்ந்தவர் தவசிமுத்து மகள் கீதாராணி, 36; சேலத்தில் உள்ள அரசு ஐ.டி.ஐ.,யில் உதவி பயிற்-சியாளராக பணியாற்றி வருகிறார். இவர், திருமணமாகி விவாகரத்து பெற்றுள்ளார்.

தற்போது தந்தையுடன் வசித்து வரு-கிறார். வழக்கு ஒன்றில் சாட்சி சொல்ல வந்த நபரிடம், நேற்று ராசிபுரம் நீதிமன்றத்தில் கீதாராணி தகராறில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து விசாரித்த ராசிபுரம் போலீசாரிடமும் வாக்குவா-தத்தில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து கீதாராணியை கைது செய்த போலீசார், மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்-தினர். தொடர்ந்து, கீதாராணி சொந்த ஜாமினில் விடுவிக்கப்-பட்டார்.

Advertisement