வேகத்தடை இருப்பது தெரியல வெள்ளை வண்ணம் பூசலாமே

கரூர்: வேகத்தடை இருப்பது தெரியாமல், இரவில் வரும் வாகனங்கள் விபத்துக்குள்ளாவதால், அதில் வெள்ளை வண்ணம் பூச வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.


கரூர் அருகே, வாங்கப்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில், 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். பள்ளிக்கு அருகே விபத்துகளை தவிர்க்க சாலையில், வேகத்தடை அமைக்கப்பட்டது. ஆனால், அதில் வெள்ளைக்கோ-டுகள் இல்லை. அந்த வழியே வாகனங்களில் வருவோர், வேகத்தடை இருப்பது தெரியாமல் அவதிப்படுகின்றனர். குறிப்பாக, இரவு நேரத்தில் செல்வோர், தவறி விழுந்து காயமடை-கின்றனர். எனவே, உயர் நிலைப்பள்ளி அருகே உள்ள வேகத்தடையில், வெள்ளை கோடு போட, நெடுஞ்சாலை துறை நிர்வாகம் நடவ-டிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement