உலக நன்மை வேண்டி கோவிலில் சிறப்பு பூஜை

ப.வேலுார்: ப.வேலுார் அருகே, பாண்டமங்கலத்தில் பிரசன்ன வெங்கட்ர-மண சுவாமி திருக்கோவில் உள்ளது. பாண்டவர்கள் வந்து வழி-பட்ட பிரசித்தி பெற்ற தலமாக உள்ளது.

நேற்று, மாசி மாத தசமி சனிக்கிழமையையொட்டி, பிரசன்ன வெங்கட்ரமன சுவாமிக்கு பால், இளநீர், மஞ்சள், தயிர், சந்தனம் போன்ற வாசனை திரவி-யங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் பிரசன்ன வெங்கட்ரமண சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து, இக்கோவிலின் அன்னதான கூடத்தில் தாசர்கள் சிறப்பு பூஜை செய்தனர். அப்போது, பக்-தர்கள், 'கோவிந்தா' கோஷம் முழங்க சுவாமியை தரிசனம் செய்-தனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Advertisement